வானம் சின்ன சின்ன தூறல்களில் பூமியை குளுமையாக்கி கொண்டு இருந்தது . கிழக்கிலிருந்த்து ஒரு சிலு சிலு காற்று, சின்னதம்பியின் தேகம் தொட்டது. குளிர்ந்த காற்று பட்டு அவனது அழகான உடல் சிலிர்த்தது. வானமே இளமையின் எல்லையாய் துள்ளி திரிந்து கொண்டிருந்தது.. அவன் மனம் இனம் புரியாத மகிழ்ச்சியில் திளைத்து இருந்தது.அந்த ஏரியா ? ஏன் உலகிலேயே அவன் தான் உச்ச கட்ட மகிழ்ச்சியாக திரிந்து கொண்டு இருந்தான், என்பதாய் தோன்றியது அவனுக்கு... தன்னை பற்றிய நெனைப்பில் முழ்கி இருந்த சமயம் அது
பள்ளி படிப்பை வகுப்பில் முதல் மாணவனாக முடித்த கையாக, மிக பிரபலமான பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அந்த பழுப்பு நிற கடிதம் வந்ததும் வாங்கி படபடக்கும் மனதோடு படித்தான். அந்த கடிதத்தை படித்ததும் உலகை வென்றது போல் ஒரு நிறைவு. அவனை மட்டும் அல்லாது, அந்த நடுத்தர வர்க்கங்களின் அனைத்து வீடுகளிலும் அவனது பெயர் பேசப்பட்டது. வறுமையில் வாடிய குடும்பத்தில் இவன் படிப்பு மற்றும் உத்யோகம் நிச்சயம் பொருளாதார ஏற்றம் தரும். அன்பான குடும்பம். அவனது அமைதியான பேச்சு, நடவடிக்கை ஆகியவற்றால் அவனது தாய், தந்தையை ஊரே போற்றியது.
மனது மலராகி, எண்ணத்தில் வண்ணங்கள் பூரித்து இருந்த அந்த வேளையில் அந்த அழகு தேவதையை சந்தித்தான். தென்றலாய் அவள் கடந்து சென்ற ஒரு விநாடி... அவள் பெயர் தான் அருந்ததி...அவன் வாழ்வில் மிகப் பெரிய மாற்றம் செய்தது. அவள் உருவில் அவனது தாய் மற்றும் அவனது மனதின் பிம்பத்தை கண்டான்.... யோசிக்க ஒரு கணம் அவனக்கு கிடைக்கவில்லை... தென்றலாய் மறைந்து போனாள். அந்த நிமிடம் அவன் மனம் புயலானது... அவள் சென்றாலும், அவளின் நினைப்பு மொத்தக் குத்தகையில் அங்கேயே தங்கியது. கண்ணை மூடினால் போதும் காற்று அலை பாயும் கூந்தலோடு அவள் கண்கள் சந்தித்த தருணம் மனத்திரையில் ஓடும். கன்னத்தில் எடுப்பாய் இருந்த பருகூட மனதை விட்டு அகலவில்லை. தனிமை அவனுக்கு பிடித்தது. பேச்சு குறைந்த்து. கண்கள் மூடி கனவில் இருக்க பிரியப்பட்டான். மீசை புற்கள் புதிதாய் முளைத்தன... கண்ணில் பார்க்கும் எதுவும் அழகாய் தெரிந்தது...
அவளை பார்த்து அவளிடம் பேச விரும்பினான். பார்த்த போதோ வார்த்தைகள் வயிற்றிலேயே சிக்கிக் கொண்டன. எந்த நேரத்திலும் அவள் நினைவே, எங்கு நோக்கினும் அவளின் பிம்பமே. தொடர்ந்த சில நாட்களில் கடைத்தெருவிலும், சாலையிலும், அவள் வீட்டு சன்னலிலும் அவள் தரிசனம் கிடைத்தது. ஒரு நொடி.... ஒரே ஒரு நொடி தான் அவள் பார்ப்பாள். இருவர் பார்வையும் நேருக்கு நேர் சந்திக்கும் போது அவள் தலை குனிவாள். ஆனால் அந்த ஒரு பார்வை போதும். அது நிகழ்த்தும் ரசாயன மாற்றம் என்ன மாயமோ. வெற்றுப் பார்வையிலேயே அந்த உறவு நெடுங்காலம் வாழ்ந்தது.
சில நாட்களில் குனிந்த தலை அவள் நிமிர்ந்ததில்லை. அவள் பார்வை படாத நாளை இவன் வெறுத்தான். உணவு உறக்கம் இன்றி கழித்தான். மனம் பித்து பிடித்தது போல் இருந்தது. ஒருவாராக மனதை சமாதானப்படுத்தி கொண்டான்... நம்மை பார்க்கவில்லை போலும் என்று...பிறகு கஷ்டப்பட்டு படிப்பில் கவனம் சென்று கொண்டிருந்தாலும்... மனது அவளை எங்கும் எப்போதும் எங்கே என் ஜீவனே என்று தேடிற்று.. வாழ்வின் நிதர்சனம் சில தருணங்களில் தட்டி எழுப்பியது. அவனது கடமைகள் புத்தியில் உரைத்தது. படிப்பு... வேலை. குடும்பம்..என்ன செய்வது யோசிக்க தொடங்கினான்... கடைசியில் கஷ்டப்பட்டு மனதை திடப்படுத்தி கொண்டு முடிவு எடுத்தான். முதலில் படிப்பு... அப்புறம் தான் காதல்.....
அவளை பார்க்காமல் அவனால் இருக்க முடிய வில்லை.. தினமும் அவளது வீடு நோக்கி நடக்கலானான்...ஒரு காதல் ரசம் சொட்டும் ஒரு மெல்லிய புன்முரவலை மட்டும் இவனிடம் சிந்துவாள். அதன் பிறகு மனதிருக்குள் பேச ஆரம்பித்தார்கள்... வாழ ஆரம்பித்தார்கள்.. வியப்பாகவும் , ஆச்சரியமாகவும் இருந்தது எப்படி ஒரு வார்த்தை கூடபேசாமல், நினைத்த மாதிரி எல்லாம் நடக்கிறது. ஒரே கலரில் ஆடைகள், எளிமையான நடை, சிரிப்பு, எண்ணங்கள் மற்றும் பல பல..
" இளந் தாமரை இதழ் உதடும்! அடர் கரிய கூந்தலும்...
இளந்தளிர் மேனியும்! எனை தேடும் சீர் இமையும் உடையோளே!
அணைக்க துடிக்கும் அன்னையாய்! நினைந்து துடிக்கும் மலராய்!
கரம் பிடிக்க ஏங்கும் குழந்தையாய் ! கசிந்து உருகும் மெழுகாய்!
என்னுள் நீ இருந்து விட்டு! என்னை எங்கு தேடுகிறாய் உன்னுள் சொல்.
உன்னை நினைத்து நான் வாழ்கிறேன்... என்னை நினைத்து நீ சொல்......
நாம் நாமாக உறைவது என்றடி என்னவளே!"
- என்ற கவிதை வரிகள் மனதில் என்றும் ஓடியது. இது போல் ஒரு நூறு கவிதைகள் எழுதி அச்சேராமல் அவளிடமும் கொடுக்கப் படாமலும் அவன் வசம் இருந்தன.
மனதிற்குள் அவளுடன் பேசுவது தொடர்ந்தது... அன்று கல்லூரி முடிந்து வந்தது முதல் அவனது மனது சரியாக இல்லை.. பலபல சிந்தனைகள் வந்து அவனை அலைகழித்தது ...அவனால் தூங்க இயலவில்லை... இரவில் குழந்தை போல் அழும் அருந்ததியின் அழுகை சத்தம் அவனுள் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியது..எப்படியாவது காலையில் சென்று பார்த்து விடுவது என்று தூங்காமல், கடவுளை பிராத்திக்க ஆரம்பித்தான்..பிறகு அவனையும் அறியாமல் அழுக ஆரம்பித்தான்.. காலையில் அருந்ததியின் வீடு நோக்கி பயணமானான். அவன் கண்ட காட்சி இடியென மேல் விழுந்தது...அருந்ததி திருமண கோலத்தில் அழகு பதுமையாக நின்றிந்தவள், பார்த்த பிறகு அழுக ஆரம்பித்தாள்.. அவனுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை..உலகமே சுற்றுவது போல் உணர்ந்து.. நிலை தடுமாறி மண்ணில் மயங்கி விழுந்தான்...
மருத்துவமனையின் வாசனைய இரு தினங்களுக்கு பிறகு உணர தொடங்கிய வினாடியில் அருந்ததியின் அழுகை முகம் மீண்டும் நெனவுக்கு வர... அவனின் அலறல் சப்தம் மருத்துமனை எங்கும் எதிரொலித்தது.. அவன் கனவிலும் மறக்கவில்லை அவளை..சில நாட்களுக்கு பிறகு இரவினில் அருந்ததியின் அழுகுரல் கேட்க தொடங்கி.மனதில் பேசி வாழ்ந்த வாழ்கை திரும்ப ஆரம்பித்தது..... மனதில் வாழ்ந்துவரும் அவளின் நிலை அறிய ஆசைப்பட்டு தேட தொடங்கினான்..
இது நடந்து இன்றோடு ஐந்து வருடங்கள், வாழ்வின் சுழற்சியில், ஜீவன கஷ்டத்தில், மனம் சில நினைவுகளை பின்னுக்கு தள்ளி இருந்த்து. இன்று சின்னத்தம்பிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் பொறுப்புள்ள மேலதிகாரி வேலை ..சொந்த வீடு, நாலு சக்கர வாகனம், எப்போதும் அலுவலக வேலையாக ஊர் ஊராக சுற்றி வருவது, ஞாயிற்றுக்கிழமையானால் நல்ல பகல் உறக்கம் என தெள்ளத்தெளிவாய் சென்று கொண்டு இருந்தது.
இன்று மீண்டும் ஒரு பெரிய புயல்.முதலில் பார்த்த போது அவளை தெரியவில்லை.அவளாக இருக்குமோ என்று மீண்டும் உற்று பார்த்தபோது,அ..அ.அருந்ததி தான்!! காலம் அவள் தோற்றத்தில் பல கொடுமைகளை எழுதி இருந்தது..
நிலை தெளிந்து, நீ.... நீங்க... உங்க பேர் அருந்ததியா என்றான் சின்னதம்பி...என்னை அடையாளம் தெரியலியா, இல்ல நடிக்கறீங்களா சின்னதம்பி என்றாள் அருந்ததி...
இல்ல.... நான் வந்து.... நீதான்னு நெனச்சு யாரையாவது உரிமையா கூப்பிட்டு, அப்புறம் அது வேற யாராவதா இருந்தா பிரச்சனை ஆயிடும்னு தான் .... என்றான் சின்னதம்பி.
எப்படி இருக்க அருந்ததி?
நல்லா இருப்பேன்னு நினைக்கறீங்களா சின்னதம்பி...
என்னாச்சு உனக்கு ஏன் எப்படி ?
ம்..ம் ... அவருக்கு என்னை பிடிக்கவில்லை..என்னை விட்டு போய் விட்டார்.. அவருக்கும் எதோ பாவம் காதல் தோல்வியாம்..!!ஆம்.. நீங்க எப்படி இருக்கீங்க... எத்தன குழந்தைக...
அது வந்து எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.. அருந்ததி என்றான்...
இதோ பாரு.. இன்னும் நீ பழசையே நினைச்சுட்டு இருக்கியா...நாம் நமது காதல தொலைத்து விட்டோம். இனி இந்த சமுதாயம் நமது காதலை கள்ள காதல் என்று மட்டும் தான் சொல்லும். நான் இப்போ வேறொருத்தரோட மனைவி, நீ நல்லா இருக்கோனும். தயவுசெஞ்சு எனக்காக நீ ஒரு கல்யாணம் பண்ணி, உன்னோட அம்மா - அப்பாவோட சந்தோசமா இருக்கோனும்....நான் இப்படியே வாழ்ந்து விட்டு போகிறேன்..என்றாள் அருந்ததி.
நம்மள பற்றி கொஞ்சம் நினைத்து பார் ! நம் காதல் அப்பவேணும்னா ஜெயிக்காம இருக்கலாம் ஆனா, இப்போ இருக்கற இந்த வாழ்க்கையில ஜெயிச்சு காட்டணும்...இந்த வாழ்க்கையை தொலைச்சா அவ்ளோதான்..அதனால தான் சொல்றேன்... என்னால் இனியும் பொய்யான வாழ்கை வாழ முடியாது..இதை மனசுல வச்சுட்டு, நீ தெரியமாக என்னுடன் வா.. நாம் இன்றிலிருந்து ஒரு புது வாழ்க்கை தொடங்குவோம் என்றான் சின்னதம்பி..
" உனக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா..? எனது கணவன் திரும்பி வந்து விட்டால் என்ன செய்வது? இந்த சமுதாயம் என்ன சொல்லும் ? - அருந்ததி.
ஆம் எனக்கு பைத்தியம் தான் பிடித்து விட்டது... மனதுக்கு பிடித்த "முதல் காதல்" தரும் சந்தோசம்...நிம்மதி...வலி..சுகம்... அன்பு போன்று உலகில் எதுவும் தர முடியாது.. உனக்கு தெரியும்..எவ்வளவு காலம் நாம் மனதோடு பேசி வாழ்ந்து வந்து உள்ளோம்.. இது உலகிற்கு புதிது.. அவர்களால் உணர முடியுமா ! ! அது எனக்கு தெரியாது... ஆனா உனக்குமா புரிய வில்லை..?? " காதல் என்று வந்து விட்டால் நல்லது, கேட்டது பார்க்க முடியாது.. உண்மையாக.. மனசு புத்தியுடன் எதுவும் ஆராய்ச்சி பண்ணாமல்....நிறம், பணம், காமம், ஜாதி எதுவும் பார்க்காமல் வருவதுதான் முதல் காதல்.. பல காதல் அதன் பின் வரலாம் .... ஆனால் அது முதல் காதலுக்கு ஈடாகாது .... காதலன் / காதலியின் வாழ்வில், ஏற்ற தாழ்வுகளை எற்படுத்துவது முதல் காதலே... நாம் இதுவரை என்னவெல்லாம் பேசியுள்ளோம் என்று சொல்லவா...சரிபார்த்து கொள்கிறியா ? எவ்வாறு முடிந்தது ? நேரில் பார்க்காமல் எவ்வாறு இவ்வளவு நாள் வாழ்ந்தோம்.. இல்லை என்னை இனி ஒரு கணம் நெனைக்க மாட்டேன் என்று சொல்லு... நாம் பிரிந்து விடலாம்.. அதை கேட்டவுடன் அவள்ளுள் இருந்த காதல், மனதின் தடை கற்களை அசைத்து தள்ளியது..மகிழ்ச்சியில் அவனை இறுக தழுவி.... ஆசை தீர முத்தமிட்டாள்..

செல்லத்துரை, மதுரை - துபாய்
38 கருத்துகள்:
"முதல் காதல்" கதைக்கு வாழ்த்துக்கள் துரை
இந்த எளியவனும் கதை போட்டியில் கலந்துள்ளேன். “அடுத்த வீட்டு பெண்” கதை படிக்க எனது blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/
முதல் காதல் கொஞ்சம் சென்சிடிவான நாட்
Very Good Durai, Heart touching story...Hates up...
//என்னைப் பற்றி
chelladurai c
Madurai, Tamilnadu, India
பிறந்தாச்சு .. வாழ்வோம்.. முடிந்தால் நல்லவனாக நன்றாக !!! இல்லை எப்படியாவது... //
கதையை விட உங்களை பற்றிய குறிப்பு படு சூப்பர்... நீங்க மதுரை அஞ்சா நெஞ்சன் அழகிரிக்கு தெரிஞ்சவரா??
"முதல் காதல்" பற்றிய உங்கள் காதல் கதை மிக அருமை...
அதிலும் வித்தியாசமான முடிவு...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தலைவா...
நிறைவன கதை. படித்து முடித்ததும் அகில்ன் எழுதிய பாவை விளக்கு நினைவிற்க்கு வந்து சென்றது.
எனது முதல் கதையான “முதல் காதல்” இய் படித்து, கருத்துரை மூலம் எனக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்த அன்பு உள்ளங்கள் திரு. Mohan Kumar, திரு. Ramachandran, திரு. Suresh, திரு.Gopi & Lawrance மற்றும் திரு. Senthil Siraj அவர்களுக்கு, எனது நன்றிய தெரிவித்து கொள்கிறென்.
எனது சுய குறிப்பு பற்றிய பெயரில்லா நண்பர் கேட்ட கேள்வி என்க்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது…. நான் மதுரைக்கார பயல் தான்… அண்ணன் அழகிரியார் மாவட்டம் தான்….. ஆனால் இருப்பது துபாய்…
செல்லத்துரை.
// சில நாட்களில் குனிந்த தலை அவள் நிமிர்ந்ததில்லை.//
ஏன் கழுத்து சுழுக்கிருச்சா
// ஒரு காதல் ரசம் சொட்டும் //
தக்காளி ரசம்,லெமன் ரசம்....
இப்படி பல ரசம் கேள்விபட்டிருக்கேன்
இது என்ன காதல் ரசம்
செ து அந்த ரசப்பொடி எங்க கிடைக்கும்னு சொல்லுங்க
// முதலில் பார்த்த போது அவளை தெரியவில்லை.//
மப்பு ஓவரா ?
// காலம் அவள் தோற்றத்தில் பல கொடுமைகளை எழுதி இருந்தது.//
த்மிழ்லையா ?
// நாம் நமது காதல தொலைத்து விட்டோம்.//
எங்க எப்படி
எதாவது காவல் நிலையத்துல
வழக்கு பதிவு செய்துவிட்டீர்களா
// நான் மதுரைக்கார பயல் தான் //
தம்பி சிறு திருத்தம்
பய்ல் இல்லை
நீ
புயல்
அய்யோ ராமா ஏன் என்ன இந்தமாதிரி ________ பதிவெல்லாம் படிக்க வெக்குர
//ஆசை தீர முத்தமிட்டாள்..//
இதற்கு பதிலா ”நச்”சென்று முத்தமிட்டால்னு இருந்திருந்தா சர்வேஷன் கிட்ட சண்டை போட்டாவது நச் கதையா தேர்ந்தெடுக்க சொல்லியிருப்பேன்!
சினிமாவுல தான் இந்த காதல் தொல்லை தாங்க முடியல, இங்கேயுமா!
Aha... i recd a lot of anani's comments... its expressed that my story s reaching now to every one... am happy abt that....
Dear annani's u hve a lot of potentials i know...( In a single minute how u posted so many comments in different names ! !) dont waste that in wrong way... Try to divert ur skills in correct way... else go and meet any psychology doctor, they will guide u to go towards the correct path...
regards
c.chelladurai
வாங்க வால்பயன்… நன்றி உங்களது கருத்துக்கு..ஆனால் ஆசை காதலியின் முத்தம் நச்னு இல்லம..சும்மா நச்.. நச்சனுல இருக்கும்.. தங்கீலிஸ் வேண்டாம் என்று நச் வார்த்தய சேர்க்கவில்லை… ஆசை காதலியின் ஆரதழுவல் முத்ததை விட நல்ல போதை தருவது எதுன இருந்த சொல்லுங்க….!!!
செல்லத்துரை…
அண்ணே கதை நல்லாயிருக்கு.
முதலில் படிக்கும் போது, காதலில் படிப்பை தொலைத்துவிட்டாரே என நினைத்தேன். முழித்துக் கொண்டு, படிப்பை தொடர்ந்து, நல்ல வேலைக்குப் போனார். காதலை மறக்கவில்லை.
காதல் என்பது கல்யாணம் மட்டுமல்ல. அதையும் தாண்டியது. மனப்பூர்வமானது, உணர்வுப்பூர்வமானது என்பதை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.
நடை மிக அழகாக இருக்கின்றது.
ஒரு சினிமாவில் சொல்வது மாதிரி, ஓவோரு சீனையும் கட் பண்ணி, கட் பண்ணி, மாற்றி, மாற்றிச் சொன்ன பாணியை மிகவும் ரசித்தேன்.
முடிவு படிக்கும் போது “நச்” அப்படின்னு முடிக்கலாம் என நான் நினைச்சேன். அதையே தம்பி வால் சொல்லியிருக்கார். நீங்களும் அழகா பதில் கொடுத்து இருக்கீங்க.
கமெண்ட் மாடரேஷன் வச்சு இருக்கீங்க அதனால் இந்த வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துடுங்க.
பின்னூட்டம் போடும் போது, தமிழில் தட்டச்சு செய்து, ஆங்கிலத்துக்கு மாறி, அதெல்லாம் கொஞ்சம் லொள்ளு வேலை. அதனால் தான்.
உங்க லே அவுட்டில் ஃபாலோயர்ஸ் விட்ஜெட் இல்லை. இதைப் போடுவது ரொம்ப சுலபம்.
உங்க கணக்கு உள்ளே போனீங்கன்னா Layout என்று ஒன்று இருக்கும். அதில் Add a Gadget பட்டனை அமுக்குங்க.
அது ஒரு Screen காண்பிக்கும்.
அதில் Followers அப்படின்னு ஒரு பட்டன் இருக்கும். அங்கு + பட்டனை அடுத்த ஸ்கிரீனுக்கு போகும். அங்கு போய், save changes கொடுத்தால் followers விட்ஜெட் வந்துடும்.
உங்களை ஃபாலோ பண்றவங்க பேர் எல்லாம் அழகா காண்பிக்கும்.
மேலும் என் உதவி தேவைப்பட்டால், raghavannigeria@gmail.com க்கு ஒரு இ-மெயில் அனுப்புங்க
அம்புடுதேன்..
கதையைப் படிக்கும் போதே கும்மி அடிக்கலாம் என நினைச்சேன்.
பின்னூட்டத்தில் அனானிக்கான பதிலைப் படித்தேன்.
ஆஹா.. சூனா பானா தப்பிச்சேடா அப்படின்னு எனக்கு நானே சொல்லிகிட்டேன்..
(சும்மா விளையாட்டுக்கு - சீரியசா எடுத்துகிடாதீங்க..)
கதை பிடிச்சிருக்கு துரை.
என் வலைப்பூவில் வந்து இந்தக்கதையை பார்க்கும்படி நீங்க கேட்டுக்கிட்டீங்க உடனே வந்து படிச்சேன்..கொஞ்சம் செண்டிமெண்ட் ஆன கதைஆனாலும் நல்லா இருக்கு பாராட்டுக்கள்!
அன்பின் துரை
கதை நல்ல நடையில் இயல்பாகச் செல்கிரது - வர்ணனைகள் அதிகம் - முடிவு உண்மையிலேயே நச்சென்று தான் இருக்கிறது.
வெற்றி பெற நல்வாழ்த்துகள் செல்லத்துரை
விவரிப்பு நல்லா இருக்கு.
நீளம்?.ஆனால் ஏதோ மிஸ்ஸிங்?
வாழ்த்துக்கள் உங்கள் ”முதல் காதலுக்கு”.மென் மேலும் உயர வாழ்த்துக்கள்.
உங்கள்
"முதல் காதல்" நன்றாக இருந்தது .
எனது பதிவை படித்ததற்கு நன்றி .எனது பதிவில் நீங்கள் ஒட்டு போடவில்லை ஓட்டை போட்டுவிடுங்கள்
உங்கள் முதல் காதல் கதை ரொம்ப நல்லாயிருண்டஹ்து.முடிவும் எதிர்பாராத விதமாக இருந்தது.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
துரை கதையின் முடிவில் எனக்கு ஒப்புதல் இல்லை, இருப்பினும் உங்கள் கதைக்கு வாழ்த்துக்கள்..
மறக்காம Word Verification ஐ நீக்கிடுங்க
நல்ல கதை...
வெற்றி பெற வாழ்த்துக்கள்...
ரொம்ப அனுபவிச்சு படிக்க முடியுதுங்க. காரணம் உங்க எழுத்தில ஜீவன் இருக்கு. பொய் கலப்பற்ற ஜீவன் மட்டும்.
"நச்" ன்னு எதுவும் இல்லை ன்னு சொன்னாலும், hypocricy இல்லாத முடிவு. "அந்த ஏழு நாட்கள்" க்கு சூப்பர் சவால் உங்க க்ளைமாக்ஸ்.
ஹ்ம்....முதல் காதலுக்கே உரிய மவுசை வெளிப்படுத்தியுள்ளது. வாழ்த்துக்கள்
முதல் காதல் என்பது எல்லாருடைய வாழ்விலும் இருக்கும். அநேகமாக நம்முடைய முதல் காதல், நம் வகுப்பு ஆசிரியையின் மேல் தான் இருக்கும்! அது சுகமானது; மறக்க முடியாதது; அதில் தோற்பதிலும் ஒரு இன்பம் இருக்கும்! உங்கள் முதல் காதல் சிறுகதையும் அதே போலத்தான்! ஆனால், இறுதியில் ஜெயிப்பது போல முடித்திருக்கிறீர்கள்... ஆனாலும், கதையில் கொஞ்சம் செயற்கைத்தனம் இருக்கிறது; பரவாயில்லை, போகப்போக முதிர்ச்சி கிடைக்கும்!
எழுத்துப் பிழை எல்லாருக்கும் சகஜம்..பொருட்பிழை தோன்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, //அழுக ஆரம்பித்தாள்..// என்பது அழ ஆரம்பித்தாள் என்று இருக்க வேண்டும்!
நல்லதொரு எழுத்தாளராக வெற்றி பெற வாழ்த்துக்கள்!
தலைவா
உங்க “இரண்டாவது காதல்” கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...
(கொட்டாம்பட்டி குமாரசாமி)
visit here....
www.allinall2010.blogspot.com
தங்களின் முதல் காதல் கதையும், சமீபத்தில் வெளிவந்த “விண்ணை தாண்டி வருவாயா” படத்தின் கதையும் ஒன்றாக இருப்பது போலுள்ளது...
ஒரு படைப்பாளியின் படைப்பை திருடிய கவுதம் மேனன் படங்களை இனி புறக்கணிப்போம்...
"முதல் காதல்" தரும் சந்தோசம்...நிம்மதி...வலி..சுகம்... அன்பு போன்று உலகில் எதுவும் தர முடியாது..
அப்டி போட்டு தாக்குங்க..
முதல் காதல் நாளே.. நம்ம கிட்ட ஒரு தனி மரியாதை.. கட கட நு படிச்சிட்டேன்..
மனதுக்கு பிடித்த முடிவு..
"எழுதுகிறவனுக்கு ஆர்வமும், முயற்சியும் ஒருங்கே இணைந்தால்தான் நல்ல கதை உருவாகும்" என்பார் மறைந்த எழுத்தாளர் திரு. சுஜாதா. உங்களிடம் அவை இரண்டும் இருக்கின்றன.
கதையை படித்த எவருக்கும், மனதில் ஆழத்தில் இருக்கும் முதல் காதல் நினைவுகள், தாமரை மொட்டாக வெளிவரும் என்பது நிஜம். வசனங்கள் இன்னமும் சுருக்கமாக, யதார்த்தமாக இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள்.
படிக்க சொன்ன நண்பர் கோபிக்கும், தங்களுக்கும் நன்றி.
அன்புடன்,
இன்பா
செல்லதுரை
கதை நல்லா இருக்கு... இந்த கதையை சமீபத்தில் ஒரு படத்தில் பார்த்த ஞாபகம்... நீங்களே சொல்லுங்களேன்...
கருத்துரையிடுக