திங்கள், 9 நவம்பர், 2009

sri karguvel ayyanar





ஸ்ரீ கற்குவேல் அய்யனார் போற்றி ! !

ஸ்ரீ கற்குவேல் அய்யனார் திருக்கோவில் அழகிய தேரிமணல் சோலையில், காயாமொழிக்கு அருகில் உள்ள தேரிகுடியிருப்பில் அழகுற அமைந்துள்ளது. தமிழ் கடவுளின் வெற்றி அரசாங்கம் புரியும் திருசெந்துரிலிருந்து மிக அருகாமையில் அமைந்த புண்ணிய பூமியாம் தேரிகுடியிருப்பு. அரேபிய பாலைவனம் போன்ற செம்மண் குன்றுகளின் அரணுக்கு நடுவே உள்ள நந்தவனத்தில் ஸ்ரீ கற்குவேல் அய்யனார், பூர்ணம் மற்றும் பொற்கலை தேவியருடன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்.

அய்யனார் வழிபாடு என்பது பழங்காலம் தொட்டு வரும் வழிபாட்டு முறையாகும். அய்யனார் என்றால் அய்யா / அச்சன் வழிபாடாகும். அய்யனார் என்பவர் ஒரு போர் வீரனாகவோ அல்லது ஒரு தலைமுறையின் முன்னோடியாகவோ இருக்கலாம் என்று ஆராச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பொதுவாக தமிழ்நாட்டின் தெற்க்கே அய்யனார் வழிபாடு அதிகமாக காணப்படுகிறது...இது ஆர்யர்களின் ( பிராமணர்கள் ) வருகைக்கு முன்பு இருந்து நடைபெற்று வரும் திராவிட கடவுள் வழிபாட்டு முறையாகும்.இதன்முலம் நமக்கு ஒரு அதிசய உண்மை புரிதலுக்கு வரும்.. தமிழ் மக்கள் எவ்வளவு தொன்மையானவர்கள்.. தமிழ் இனமே தற்போதுள்ள உலகில் முதன்மையானவர்கள் !!

அய்யனார் வழிபாடு.... தமிழர்களின் இயற்கை வழிபாடு.... தமிழர்களின் வழிபாட்டு முறையானது எந்தொரு தனி , உருவ வழிபாட்டை கொண்டது கிடையாது. தனது முதாதையர் அப்பா,அம்மா வை இயற்கை அன்னையோடு இணைந்து வணங்கும் முறை. அதனாலதான் பல பெயர்களில் அய்யனார் வளம் வருகிறார். ஒவ்வரு பெயரும் ஒரு தமிழ் இனத்தின் முதல் வித்து. இயற்கை பேரழிவு... அந்நிய அடிமைகளின் மதமாற்றம் ( MLM Concept in the Humanity )... ஆரியர்களின் சாதிகொடுமைகளை கடந்து நமது முன்னோர்களின் ஆத்மா... அய்யனார் என்ற பெயரில் நம்மை காத்து வருகிறது.

அய்யனார் - ஐயப்பன் வழிபாட்டு முறை இரண்டும் ஒன்று தான் என்று சமய பெரியோர்கள் கூறுகிறார்கள். அதற்க்கு ஒரு சாட்சியை நாம் ஸ்ரீ கற்குவேல் அய்யனார் சன்னதியில் பார்க்க இயலும். வருடம் தோறும் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி முதல் மாமிச உணவுகளை தவிர்த்து விரதம் மேற்கொண்டு, லட்சோப.. லட்சோப..மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கார்த்திகை கடைசி தேதியில் தேரி மண் மேட்டில் ஒரு தாய் மக்களாய் கள்ளர் வெட்டு திருவிழாவுக்கு ஒன்று கூடுவார்கள். மக்களை துன்புறுத்தி வந்த கள்ளர்களை அழித்து மக்களை அய்யனார் காப்பாற்றுவதுதான் கள்ளர் வெட்டு திருவிழா நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும்.



திருவிழாவின் போது அய்யனார் கையில் அரிவாளுடனும், மற்ற பிற ஆயுதங்களுடன் செல்லும் வழியெங்கும் கருடன் ( பருந்து ) வட்டம் இட்டு சுற்றி வரும். மற்ற நேரங்களில் அந்த பாலைவன காட்டில் ஒரு பருந்து பார்க்க முடியாது. ஐயப்பன் கோவிலில் திரு ஆபரண பெட்டிய சுற்றி கருடன் ( பருந்து ) வட்டம் இட்டு சுற்றி வருவது அனைவரும் அறிந்ததே.

ஐயப்பன் குழந்தையாக குளத்து புழயிலும், வாலிபராக ஆரியங்காவிலும், பிரமச்சரிய நிலையில் சபரி மலையிலும், அய்யனாக அச்சன்கோவிலில் பூரணம், பொற்கலை தேவியருடனும் அய்யனார் - கேரளா மண்ணில் ஐயப்பனாக இருக்கிறார்.

அய்யன் - ஐயப்பன் அருள் பெற்று... இனிது வாழ வாழ்த்தி...
சாமியே! சரணம் அய்யா..!!!.. ஐயப்பா.... ! !

செல்லத்துரை, மதுரை-துபாய்

1 கருத்து:

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

கோயில் பற்றி நல்ல விவரங்கள் எழுதி இருக்கிறீர்கள்.. அடுத்தமுறை அங்கே சென்று வணங்குகிறோம்.. நன்றி..