வியாழன், 12 நவம்பர், 2009

முதல் காதல்


சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி. 


முதல் காதல் ! !  

வானம் சின்ன சின்ன தூறல்களில் பூமியை குளுமையாக்கி கொண்டு இருந்தது . கிழக்கிலிருந்த்து ஒரு சிலு சிலு காற்று, சின்னதம்பியின் தேகம் தொட்டது. குளிர்ந்த காற்று பட்டு அவனது அழகான உடல் சிலிர்த்தது. வானமே இளமையின் எல்லையாய் துள்ளி திரிந்து கொண்டிருந்தது.. அவன் மனம் இனம் புரியாத மகிழ்ச்சியில் திளைத்து இருந்தது.அந்த ஏரியா ? ஏன் உலகிலேயே அவன் தான் உச்ச கட்ட மகிழ்ச்சியாக திரிந்து கொண்டு இருந்தான், என்பதாய் தோன்றியது அவனுக்கு... தன்னை பற்றிய நெனைப்பில் முழ்கி இருந்த சமயம் அது

பள்ளி படிப்பை வகுப்பில் முதல் மாணவனாக முடித்த கையாக, மிக பிரபலமான பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அந்த பழுப்பு நிற கடிதம் வந்ததும் வாங்கி படபடக்கும் மனதோடு படித்தான். அந்த கடிதத்தை படித்ததும் உலகை வென்றது போல் ஒரு நிறைவு. அவனை மட்டும் அல்லாது, அந்த நடுத்தர வர்க்கங்களின் அனைத்து வீடுகளிலும் அவனது பெயர் பேசப்பட்டது. வறுமையில் வாடிய குடும்பத்தில் இவன் படிப்பு மற்றும் உத்யோகம் நிச்சயம் பொருளாதார ஏற்றம் தரும். அன்பான குடும்பம். அவனது அமைதியான பேச்சு, நடவடிக்கை ஆகியவற்றால் அவனது தாய், தந்தையை ஊரே போற்றியது.

மனது மலராகி, எண்ணத்தில் வண்ணங்கள் பூரித்து இருந்த அந்த வேளையில் அந்த அழகு தேவதையை சந்தித்தான். தென்றலாய் அவள் க‌டந்து சென்ற ஒரு விநாடி... அவள் பெயர் தான் அருந்ததி...அவன் வாழ்வில் மிகப் பெரிய மாற்றம் செய்தது. அவள் உருவில் அவனது தாய் மற்றும் அவனது மனதின் பிம்ப‌த்தை கண்டான்.... யோசிக்க ஒரு கணம் அவனக்கு கிடைக்கவில்லை... தென்றலாய் மறைந்து போனாள். அந்த நிமிடம் அவன் மனம் புயலானது... அவள் சென்றாலும், அவளின் நினைப்பு மொத்தக் குத்தகையில் அங்கேயே தங்கியது. கண்ணை மூடினால் போதும் காற்று அலை பாயும் கூந்தலோடு அவள் கண்கள் சந்தித்த தருணம் மனத்திரையில் ஓடும். கன்னத்தில் எடுப்பாய் இருந்த பருகூட மனதை விட்டு அகலவில்லை. தனிமை அவனுக்கு பிடித்தது. பேச்சு குறைந்த்து. கண்கள் மூடி கனவில் இருக்க பிரியப்பட்டான். மீசை புற்கள் புதிதாய் முளைத்தன... கண்ணில் பார்க்கும் எதுவும் அழகாய் தெரிந்தது...


அவளை பார்த்து அவளிடம் பேச விரும்பினான். பார்த்த போதோ வார்த்தைகள் வயிற்றிலேயே சிக்கிக் கொண்டன. எந்த நேரத்திலும் அவள் நினைவே, எங்கு நோக்கினும் அவளின் பிம்பமே. தொடர்ந்த சில நாட்களில் கடைத்தெருவிலும், சாலையிலும், அவள் வீட்டு சன்னலிலும் அவள் தரிசனம் கிடைத்தது. ஒரு நொடி.... ஒரே ஒரு நொடி தான் அவள் பார்ப்பாள். இருவர் பார்வையும் நேருக்கு நேர் சந்திக்கும் போது அவள் தலை குனிவாள். ஆனால் அந்த ஒரு பார்வை போதும். அது நிகழ்த்தும் ரசாயன மாற்றம் என்ன மாயமோ. வெற்றுப் பார்வையிலேயே அந்த உறவு நெடுங்காலம் வாழ்ந்தது.

சில நாட்களில் குனிந்த தலை அவள் நிமிர்ந்ததில்லை. அவள் பார்வை படாத நாளை இவன் வெறுத்தான். உணவு உறக்கம் இன்றி கழித்தான். மனம் பித்து பிடித்தது போல் இருந்தது. ஒருவாராக மனதை சமாதானப்படுத்தி கொண்டான்... நம்மை பார்க்கவில்லை போலும் என்று...பிறகு கஷ்டப்பட்டு படிப்பில் கவனம் சென்று கொண்டிருந்தாலும்... மனது அவளை எங்கும் எப்போதும் எங்கே என் ஜீவனே என்று தேடிற்று.. வாழ்வின் நிதர்சனம் சில தருணங்களில் தட்டி எழுப்பியது. அவனது கடமைகள் புத்தியில் உரைத்தது. படிப்பு... வேலை. குடும்பம்..என்ன செய்வது யோசிக்க தொடங்கினான்... கடைசியில் கஷ்டப்பட்டு மனதை திடப்படுத்தி கொண்டு முடிவு எடுத்தான். முதலில் படிப்பு... அப்புறம் தான் காதல்.....

அவளை பார்க்காமல் அவனால் இருக்க முடிய வில்லை.. தினமும் அவளது வீடு நோக்கி நடக்கலானான்...ஒரு காதல் ரசம் சொட்டும் ஒரு மெல்லிய புன்முரவலை மட்டும் இவனிடம் சிந்துவாள். அதன் பிறகு மனதிருக்குள் பேச ஆரம்பித்தார்கள்... வாழ ஆரம்பித்தார்கள்.. வியப்பாகவும் , ஆச்சரியமாகவும் இருந்தது எப்படி ஒரு வார்த்தை கூடபேசாமல், நினைத்த மாதிரி எல்லாம் நடக்கிறது. ஒரே கலரில் ஆடைகள், எளிமையான நடை, சிரிப்பு, எண்ணங்கள் மற்றும் பல பல..

" இளந் தாமரை இதழ் உதடும்! அடர் கரிய கூந்தலும்...
இளந்தளிர் மேனியும்! எனை தேடும் சீர் இமையும் உடையோளே!
அணைக்க துடிக்கும் அன்னையாய்! நினைந்து துடிக்கும் ம‌லராய்!
கரம் பிடிக்க ஏங்கும் குழந்தையாய் ! கசிந்து உருகும் மெழுகாய்!
என்னுள் நீ இருந்து விட்டு! என்னை எங்கு தேடுகிறாய் உன்னுள் சொல்.
உன்னை நினைத்து நான் வாழ்கிறேன்... என்னை நினைத்து நீ சொல்......
நாம் நாமாக உறைவது என்றடி என்னவளே!"
- என்ற கவிதை வரிகள் மனதில் என்றும் ஓடியது. இது போல் ஒரு நூறு கவிதைகள் எழுதி அச்சேராமல் அவளிடமும் கொடுக்கப் படாமலும் அவன் வசம் இருந்தன.


மனதிற்குள் அவளுடன் பேசுவது தொடர்ந்தது... அன்று கல்லூரி முடிந்து வந்தது முதல் அவனது மனது சரியாக இல்லை.. பலபல சிந்தனைகள் வந்து அவனை அலைகழித்தது ...அவனால் தூங்க இயலவில்லை... இரவில் குழந்தை போல் அழும் அருந்ததியின் அழுகை சத்தம் அவனுள் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியது..எப்படியாவது காலையில் சென்று பார்த்து விடுவது என்று தூங்காமல், கடவுளை பிராத்திக்க ஆரம்பித்தான்..பிறகு அவனையும் அறியாமல் அழுக ஆரம்பித்தான்.. காலையில் அருந்ததியின் வீடு நோக்கி பயணமானான். அவன் கண்ட காட்சி இடியென மேல் விழுந்தது...அருந்ததி திருமண கோலத்தில் அழகு பதுமையாக நின்றிந்தவள், பார்த்த பிறகு அழுக ஆரம்பித்தாள்.. அவனுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை..உலகமே சுற்றுவது போல் உணர்ந்து.. நிலை தடுமாறி மண்ணில் மயங்கி விழுந்தான்...

மருத்துவமனையின் வாசனைய இரு தினங்களுக்கு பிறகு உணர தொடங்கிய வினாடியில் அருந்ததியின் அழுகை முகம் மீண்டும் நெனவுக்கு வர... அவனின் அலறல் சப்தம் மருத்துமனை எங்கும் எதிரொலித்தது.. அவன் கனவிலும் மறக்கவில்லை அவளை..சில நாட்களுக்கு பிறகு இரவினில் அருந்ததியின் அழுகுரல் கேட்க தொடங்கி.மனதில் பேசி வாழ்ந்த வாழ்கை திரும்ப ஆரம்பித்தது..... மனதில் வாழ்ந்துவரும் அவளின் நிலை அறிய ஆசைப்பட்டு தேட தொடங்கினான்..

இது நடந்து இன்றோடு ஐந்து வருடங்கள், வாழ்வின் சுழற்சியில், ஜீவன கஷ்டத்தில், மனம் சில நினைவுகளை பின்னுக்கு தள்ளி இருந்த்து. இன்று சின்னத்தம்பிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் பொறுப்புள்ள மேலதிகாரி வேலை ..சொந்த வீடு, நாலு சக்கர வாகனம், எப்போதும் அலுவலக வேலையாக ஊர் ஊராக சுற்றி வருவது, ஞாயிற்றுக்கிழமையானால் நல்ல பகல் உற‌க்கம் என தெள்ளத்தெளிவாய் சென்று கொண்டு இருந்தது.


இன்று மீண்டும் ஒரு பெரிய புயல்.முதலில் பார்த்த போது அவளை தெரியவில்லை.அவளாக இருக்குமோ என்று மீண்டும் உற்று பார்த்தபோது,அ..அ.அருந்ததி தான்!! காலம் அவள் தோற்றத்தில் பல கொடுமைகளை எழுதி இருந்தது..
நிலை தெளிந்து, நீ.... நீங்க... உங்க பேர் அருந்த‌தியா என்றான் சின்ன‌த‌ம்பி...என்னை அடையாள‌ம் தெரிய‌லியா, இல்ல‌ ந‌டிக்க‌றீங்க‌ளா சின்ன‌த‌ம்பி என்றாள் அருந்த‌தி...
இல்ல.... நான் வந்து.... நீதான்னு நெனச்சு யாரையாவது உரிமையா கூப்பிட்டு, அப்புறம் அது வேற யாராவதா இருந்தா பிரச்சனை ஆயிடும்னு தான் .... என்றான் சின்னதம்பி.
எப்படி இருக்க அருந்ததி?

நல்லா இருப்பேன்னு நினைக்கறீங்களா சின்னதம்பி...
என்னாச்சு உனக்கு ஏன் எப்படி ? 
ம்..ம் ... அவருக்கு என்னை பிடிக்கவில்லை..என்னை விட்டு போய் விட்டார்.. அவருக்கும் எதோ  பாவம் காதல் தோல்வியாம்..!!ஆம்.. நீங்க எப்படி இருக்கீங்க... எத்தன குழந்தைக...
அது வந்து எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.. அருந்ததி என்றான்...


இதோ பாரு.. இன்னும் நீ பழசையே நினைச்சுட்டு இருக்கியா...நாம் நமது காதல தொலைத்து விட்டோம். இனி இந்த சமுதாயம் நமது காதலை கள்ள காதல் என்று மட்டும் தான் சொல்லும். நான்  இப்போ வேறொருத்தரோட மனைவி, நீ நல்லா இருக்கோனும். தயவுசெஞ்சு எனக்காக நீ ஒரு கல்யாணம் பண்ணி, உன்னோட அம்மா - அப்பாவோட சந்தோசமா இருக்கோனும்....நான் இப்படியே வாழ்ந்து விட்டு போகிறேன்..என்றாள் அருந்ததி.


நம்மள பற்றி கொஞ்சம் நினைத்து பார் ! நம் காதல் அப்பவேணும்னா ஜெயிக்காம இருக்கலாம் ஆனா, இப்போ இருக்கற இந்த வாழ்க்கையில ஜெயிச்சு காட்டணும்...இந்த வாழ்க்கையை தொலைச்சா அவ்ளோதான்..அதனால தான் சொல்றேன்... என்னால் இனியும் பொய்யான வாழ்கை வாழ முடியாது..இதை மனசுல வ‌ச்சுட்டு, நீ தெரியமாக என்னுடன் வா.. நாம் இன்றிலிருந்து ஒரு புது வாழ்க்கை தொடங்குவோம் என்றான் சின்னதம்பி..


" உனக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா..? எனது கணவன் திரும்பி வந்து விட்டால் என்ன செய்வது? இந்த சமுதாயம் என்ன சொல்லும் ? - அருந்ததி.


ஆம் எனக்கு பைத்தியம் தான் பிடித்து விட்டது... மனதுக்கு பிடித்த "முதல் காதல்" தரும் சந்தோசம்...நிம்மதி...வலி..சுகம்... அன்பு போன்று உலகில் எதுவும் தர முடியாது.. உனக்கு தெரியும்..எவ்வளவு காலம் நாம் மனதோடு பேசி வாழ்ந்து வந்து உள்ளோம்.. இது உலகிற்கு புதிது.. அவர்களால் உணர முடியுமா ! ! அது எனக்கு தெரியாது... ஆனா உனக்குமா புரிய வில்லை..?? " காதல் என்று வந்து விட்டால் நல்லது, கேட்டது பார்க்க முடியாது.. உண்மையாக.. மனசு புத்தியுடன் எதுவும் ஆராய்ச்சி பண்ணாமல்....நிறம், பணம், காமம், ஜாதி எதுவும் பார்க்காமல் வருவதுதான் முதல் காதல்.. பல காதல் அதன் பின் வரலாம் .... ஆனால் அது முதல் காதலுக்கு ஈடாகாது .... காதலன் / காதலியின் வாழ்வில், ஏற்ற தாழ்வுகளை எற்படுத்துவது முதல் காதலே... நாம் இதுவரை என்னவெல்லாம் பேசியுள்ளோம் என்று சொல்லவா...சரிபார்த்து கொள்கிறியா ? எவ்வாறு முடிந்தது ? நேரில் பார்க்காமல் எவ்வாறு இவ்வளவு நாள் வாழ்ந்தோம்.. இல்லை என்னை இனி ஒரு கணம் நெனைக்க மாட்டேன் என்று சொல்லு... நாம் பிரிந்து விடலாம்.. அதை கேட்டவுடன் அவள்ளுள் இருந்த காதல், மனதின் தடை கற்களை அசைத்து தள்ளியது..மகிழ்ச்சியில் அவனை இறுக தழுவி.... ஆசை தீர முத்தமிட்டாள்..


செல்லத்துரை, மதுரை - துபாய்

திங்கள், 9 நவம்பர், 2009

sri karguvel ayyanar

ஸ்ரீ கற்குவேல் அய்யனார் போற்றி ! !

ஸ்ரீ கற்குவேல் அய்யனார் திருக்கோவில் அழகிய தேரிமணல் சோலையில், காயாமொழிக்கு அருகில் உள்ள தேரிகுடியிருப்பில் அழகுற அமைந்துள்ளது. தமிழ் கடவுளின் வெற்றி அரசாங்கம் புரியும் திருசெந்துரிலிருந்து மிக அருகாமையில் அமைந்த புண்ணிய பூமியாம் தேரிகுடியிருப்பு. அரேபிய பாலைவனம் போன்ற செம்மண் குன்றுகளின் அரணுக்கு நடுவே உள்ள நந்தவனத்தில் ஸ்ரீ கற்குவேல் அய்யனார், பூர்ணம் மற்றும் பொற்கலை தேவியருடன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்.

அய்யனார் வழிபாடு என்பது பழங்காலம் தொட்டு வரும் வழிபாட்டு முறையாகும். அய்யனார் என்றால் அய்யா / அச்சன் வழிபாடாகும். அய்யனார் என்பவர் ஒரு போர் வீரனாகவோ அல்லது ஒரு தலைமுறையின் முன்னோடியாகவோ இருக்கலாம் என்று ஆராச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பொதுவாக தமிழ்நாட்டின் தெற்க்கே அய்யனார் வழிபாடு அதிகமாக காணப்படுகிறது...இது ஆர்யர்களின் ( பிராமணர்கள் ) வருகைக்கு முன்பு இருந்து நடைபெற்று வரும் திராவிட கடவுள் வழிபாட்டு முறையாகும்.இதன்முலம் நமக்கு ஒரு அதிசய உண்மை புரிதலுக்கு வரும்.. தமிழ் மக்கள் எவ்வளவு தொன்மையானவர்கள்.. தமிழ் இனமே தற்போதுள்ள உலகில் முதன்மையானவர்கள் !!

அய்யனார் வழிபாடு.... தமிழர்களின் இயற்கை வழிபாடு.... தமிழர்களின் வழிபாட்டு முறையானது எந்தொரு தனி , உருவ வழிபாட்டை கொண்டது கிடையாது. தனது முதாதையர் அப்பா,அம்மா வை இயற்கை அன்னையோடு இணைந்து வணங்கும் முறை. அதனாலதான் பல பெயர்களில் அய்யனார் வளம் வருகிறார். ஒவ்வரு பெயரும் ஒரு தமிழ் இனத்தின் முதல் வித்து. இயற்கை பேரழிவு... அந்நிய அடிமைகளின் மதமாற்றம் ( MLM Concept in the Humanity )... ஆரியர்களின் சாதிகொடுமைகளை கடந்து நமது முன்னோர்களின் ஆத்மா... அய்யனார் என்ற பெயரில் நம்மை காத்து வருகிறது.

அய்யனார் - ஐயப்பன் வழிபாட்டு முறை இரண்டும் ஒன்று தான் என்று சமய பெரியோர்கள் கூறுகிறார்கள். அதற்க்கு ஒரு சாட்சியை நாம் ஸ்ரீ கற்குவேல் அய்யனார் சன்னதியில் பார்க்க இயலும். வருடம் தோறும் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி முதல் மாமிச உணவுகளை தவிர்த்து விரதம் மேற்கொண்டு, லட்சோப.. லட்சோப..மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கார்த்திகை கடைசி தேதியில் தேரி மண் மேட்டில் ஒரு தாய் மக்களாய் கள்ளர் வெட்டு திருவிழாவுக்கு ஒன்று கூடுவார்கள். மக்களை துன்புறுத்தி வந்த கள்ளர்களை அழித்து மக்களை அய்யனார் காப்பாற்றுவதுதான் கள்ளர் வெட்டு திருவிழா நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும்.திருவிழாவின் போது அய்யனார் கையில் அரிவாளுடனும், மற்ற பிற ஆயுதங்களுடன் செல்லும் வழியெங்கும் கருடன் ( பருந்து ) வட்டம் இட்டு சுற்றி வரும். மற்ற நேரங்களில் அந்த பாலைவன காட்டில் ஒரு பருந்து பார்க்க முடியாது. ஐயப்பன் கோவிலில் திரு ஆபரண பெட்டிய சுற்றி கருடன் ( பருந்து ) வட்டம் இட்டு சுற்றி வருவது அனைவரும் அறிந்ததே.

ஐயப்பன் குழந்தையாக குளத்து புழயிலும், வாலிபராக ஆரியங்காவிலும், பிரமச்சரிய நிலையில் சபரி மலையிலும், அய்யனாக அச்சன்கோவிலில் பூரணம், பொற்கலை தேவியருடனும் அய்யனார் - கேரளா மண்ணில் ஐயப்பனாக இருக்கிறார்.

அய்யன் - ஐயப்பன் அருள் பெற்று... இனிது வாழ வாழ்த்தி...
சாமியே! சரணம் அய்யா..!!!.. ஐயப்பா.... ! !

செல்லத்துரை, மதுரை-துபாய்

செவ்வாய், 15 செப்டம்பர், 2009


காதல் - அழகு - பணம் -
கட்வுளின் ஆசி..!

காதல் : காதல் என்ற புனிதமான ஒன்று எதன்மேல் நமக்கு அதிகம் பற்று உள்ளதை பொருத்தது... கட்வுள் மேல் வைக்கும் காதல்லில் இருந்து... அம்மா.. இயற்கை...நமது உடல்...அப்புறம் பெண் ! ! ! ! !. இதில் நிச்சயம் மன அமைதி கிடைக்கும்.. காதலி தவிர்த்து... ஆனால் அழகு, பணத்தின் மீது ஆசை வைத்தால்..... அது காதல் இல்லை மோகம்.... மோகம்... அப்புறம் உனக்கு வரும் மோசம்...

அழகு : நான் அழகா இருக்கேன் ... நீயும் அழகா இருகிறாய்.... இது அழகானது.. இல்லை எனில் வருமே மனிதனிடம் ஒரு பிரிவினைவாதம்....வன்முறை...தாழ்வு மனப்பான்மை.. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.! ! ! ! உனக்கு எல்லாம் அழகாக தெரியும் வரை...நீ நல்லவன்..மகிழ்ச்சியாக இருப்பாய்... அழகு நிரந்தமானது உன் மனம் அழகாக இருக்கும் வரை.....

பணம் : பணம் பத்தும் செய்யும்.... முடிந்தால் அதைவிட அதிகமாகவும் செய்யும்... எச்சரிக்கை... உன்னையும் கொள்ளும்.. பணத்தின் அவசியம் பட்டினி உணர்த்தும்.. உன் மரணத்தின் இறுதி நாள் சொல்லும்...நீ இழந்து விட்டே உனோட வாழ்கைய பணத்த தேடி...

கடவுள் உண்டா : இது என்ன கேள்வி ... நிச்சயமாக கடவுள் இல்லை...அதாவது வெளிப்புறத்தில்... கட்வுள் உன்னுள் இருக்கிறான்.. அது உன் மனசாட்சி... அன்பே கடவுள்....மற்றவர்களிடம் நீ அன்பு பாராட்டும் போது நீ உணரலாம்...அவன் உன்னிள் சிரிப்பதை...

குறிப்பு : இது என்ன விவாதம்... கல்வியா? செல்வமா? வீரமா? மாதிரி... அழகு + பணம் இல்லையேல் காதல் இல்லை; காதல் + பணம் இல்லையேல் அழகு இல்லை ;காதல் + பணம் + அழகு இல்லையேல் கடவுள் இல்லை..

உங்கள் விமர்சனம் வரவேற்கபடுகிறது
செல்லத்துரை, துபாய்